----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Sunday, September 3, 2023

நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை: ஆயுதங்களுடன் களமிறங்கும் முப்படையினர்

 நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு புலனாய்வு அமைப்புகளையும், அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரையும், சோதனைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.




Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive