Vettri

Breaking News

சர்ச்சைக்குரிய காணொளியை நீக்கியது சனல்4 -நாமல் வெளியிட்ட தகவல்




 உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் அதன் பின்னால் இருந்த மறைகரங்கள் தொடர்பில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தும்வகையில் காணொளியை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, அந்த காணொளி காட்சிகளை அகற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.




அதன் இணையத்தளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் சர்ச்சைக்குரிய காணொளி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் காணொளி நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.வரலாற்று ரீதியிலான பகை 

ராஜபக்சாக்களுடன் சனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


சர்ச்சைக்குரிய காணொளியை நீக்கியது சனல்4 -நாமல் வெளியிட்ட தகவல் | Channel 4 Has Removed The Controversial Video


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.


புதிய காணொளி

பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்சாக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக சனல் 4 புதிய காணொளியை வெளியிட்டு இருக்கலாம் என நாமல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



Black Video (1) from Ellalan on Vimeo.


2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ச என்ற பெயருடனும் சனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது, அது அரசியல் மயமாக்கப்படுவது சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments