Home
/
Unlabelled
/
சம்மாந்துறையில் CEB அலுவலகம் அமைக்க காணி தேடல்; டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல்!
சம்மாந்துறையில் CEB அலுவலகம் அமைக்க காணி தேடல்; டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல்!
சம்மாந்துறையில் CEB அலுவலகம் அமைக்க காணி தேடல்; டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல்!
தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் இலங்கை மின்சார சபையின் (CEB) அலுவலகக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான காணியை அடையாளம் காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த (16) திங்கட்கிழமை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை காரியாலயத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மீராலெவ்வை அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அம்பாறை கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா,மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் அமீர் ஐ. அப்துல் ஜப்பார், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை , பிரதேச சபை உறுப்பினர் வை.பி.எம். நவாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இலங்கை மின்சார சபையின் சம்மாந்துறை அலுவலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.மஹ்மூத் லெப்பை, மஜ்லிஸ் அஷ்ஷுறா மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இதன்போது, சம்மாந்துறைப் பிரதேச மக்களின் மின்சாரத் தேவைகள் மற்றும் சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் CEB அலுவலகக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்குப் பொருத்தமான காணியைத் தெரிவு செய்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.
எனினும், கலந்துரையாடலின்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான காணி ஒன்றை இறுதியாக அடையாளம் காண முடியாத நிலையில், இவ்விடயம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடலை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் CEB அலுவலகம் அமைக்க காணி தேடல்; டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல்!
Reviewed by Thakzani
on
11/19/2026 12:54:00 PM
Rating: 5
Reviewed by Thakzani
on
11/19/2026 12:54:00 PM
Rating: 5


No comments