Column Left

Vettri

Breaking News

சமூகப் பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குக் கௌரவம்




 சமூகப் பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குக் கௌரவம்


(செல்வி வினாயகமூர்த்தி)


இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தேசிய சமூகப் பாதுகாப்பு விருது வழங்கும் நிகழ்வு, இன்று (05) வியாழக்கிழமை மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் நடைபெற்றது.



கிழக்கு மாகாண சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் S.T. சுதாகாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வூதிய உரித்தற்ற பொதுமக்களுக்கு 60 வயதிற்குப் பின்னர் ஓய்வூதியப் பயனைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மட்ட அடைவைப் பெற்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டன.


2025ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர் இணைத்தல் மற்றும் தவணைப் பங்களிப்புக்களை சேகரித்தல் ஆகியவற்றில் தேசிய மட்ட இலக்கை அடைந்தமைக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு இத்தகைய தேசிய விருது கிடைத்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.


இந்நிகழ்வில் இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் தவிசாளர் M.K.B. திசாநாயக்க, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயற்படுத்திய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



No comments

Subscribe Us