Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேசத்தில் மேலும் நான்கு வீதிகள் கான்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன!




 திருக்கோவில் பிரதேசத்தில் மேலும் நான்கு வீதிகள் கான்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன!


 ஜே.கே.யதுர்ஷன்


தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் மேலும் நான்கு (04) முக்கிய வீதிகளைக் கான்கிரீட் வீதிகளாக அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.



இதற்கமைய, புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் விபரங்கள் வருமாறு:


1. முத்து மாரியம்மன் கோவில் முன் வீதி – 100 மீற்றர் (சங்கமன்கிராமம்).


2. பழைய தபாலக 1ஆம் குறுக்குவீதி – 124 மீற்றர் (விநாயகபுரம் – 01).


3. ஆலையடி பிள்ளையார் கோவில் முன் வீதி – 115 மீற்றர் (தம்பட்டை – 01).


4. பழைய தபாலக 7ஆம் குறுக்குவீதி – 133 மீற்றர் (விநாயகபுரம் – 04).


கிராமிய மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைத்து, அன்றாடப் பயணங்களை இலகுபடுத்துவதுடன், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


குறிப்பாக, குறித்த வீதிகள் புனரமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கிராமிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேம்படுத்தும் இத்தகைய பணிகள் தடையின்றி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments

Subscribe Us