கற்பிட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி
கற்பிட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி மண்டலக்குடா மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளி (12,13) ஆகிய இரு தினங்கள் பாடசாலையில் தலைவர் என் எம் மஹீன் தலைமையில் இடம்பெற்றது
இதில் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ் எச் எம் முஸம்மில் மற்றும் சுவிஸ் பைசல் ஆகியோருடன் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் நிப்ராஸ் கலந்து சிறப்பித்தார்.
முன் பள்ளிகளின் வருடாந்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு இம் முறை கற்பிட்டி நகரில் காணப்படும் சகல வளங்களையும் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தும் வண்ணம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பள்ளியின் ஆசிரியர்களான
எஸ் சஜானஸ் மற்றும்
எம் ஐ எம் சஹானா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சிறார்களின் பெற்றோர்களால் வடிவமைக்கப்பட்டு கண்காட்சி கூடத்தில் காட்சி படுத்தப்பட்டிருந்தமை பாராட்டுக்குறியதாக அமைந்திருந்தது
மேலும் கற்பிட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பள்ளி கடந்த 15 வருடங்களாக மண்டலக்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
கற்பிட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி
Reviewed by Thakzani
on
11/14/2026 02:29:00 PM
Rating: 5
Reviewed by Thakzani
on
11/14/2026 02:29:00 PM
Rating: 5

No comments