Column Left

Vettri

Breaking News

கடவுச்சீட்டு - விசா விதிகளை தளர்த்திய இந்தியா - இலங்கைத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு




 இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.  

அந்தவகையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் முக்கிய தளர்வுகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.



மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) உத்தரவு, 2026' (The Immigration and Foreigners (Exemption) (Amendment) Order, 2026) வாயிலாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வருகை தந்து பதிவுசெய்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் கடுமையான கடவுச்சீட்டு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடவுச்சீட்டு ஆவணங்களில் சிக்கல் உள்ள இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கும் இது வழிவகுக்கின்றது.


அத்துடன் அவர்கள் தங்களது வதிவிட அனுமதி தொடர்பான நடைமுறைகளை எளிதாகப் பூர்த்தி செய்வதற்கும் இந்தத் தளர்வு வழிவகுக்கிறது.

No comments

Subscribe Us