Column Left

Vettri

Breaking News

கல்முனை ஸாஹிரா கல்லூரியில் வாசிப்பு வார விழா : வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைப்பு




 கல்முனை ஸாஹிரா கல்லூரியில் வாசிப்பு வார விழா : வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைப்பு


நூருல் ஹுதா உமர்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் நூலகக் குழு மற்றும் தமிழ் மொழி ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்த வாசிப்பு வார விழாவின் நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றன.



“வாசிப்போம், கற்போம், எதிர்காலத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் மாத இறுதி வாரம் முதல் முன்னெடுக்கப்பட்ட இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களின் வாசிப்புப் பழக்கம், படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகளும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களை இலக்காகக் கொண்டு வகுப்பு ரீதியாகப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய, தரம் 6 மாணவர்களுக்கு வாசிப்பு மூலை அமைத்தல், தரம் 7 மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, தரம் 8 மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி, தரம் 9 மாணவர்களுக்குச் சித்திரப் போட்டி, தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கு விவாதப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன.

நிறைவு விழாவில் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் பிரதம அதிதியாகவும், இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ். முபாரக் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இதில் ஏனைய பிரதி அதிபர்கள், ஆசிரியர் சங்கச் செயலாளர் எச்.எம். ரிசான், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

விழாவை முன்னிட்டு மாணவர்களின் கவிதை, பாடல், பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், “இலத்திரனியல் ஊடகங்கள் வாசிப்பை வளர்த்ததா? அழித்ததா?” என்ற தலைப்பிலான சிறப்பு விவாதமும் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் நடுவராகச் செயற்பட்ட இவ்விவாதத்தில் பங்கேற்ற இரு அணிகளினதும் திறமைகளைப் பாராட்டிய அவர், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் வாசிப்பு வாரப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களின் அறிவாற்றல், சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாசிப்பு வார விழா சிறந்த கல்விசார் நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Subscribe Us