Column Left

Vettri

Breaking News

எதிர்பார்ப்பை விஞ்சிய அமெரிக்க வேலைவாய்ப்பு வளர்ச்சி!




 அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.



இதனால் அமெரிக்க தொழிலாளர் சந்தை தொடர்ந்து வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் புதிதாக 165,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

செப்டம்பர் மாத வேலைவாய்ப்பு வளர்ச்சி 29,000 என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 60,000 ஆகத் திருத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பொருளாதார நிபுணர்கள் அக்டோபரில் 65,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகும் என எதிர்பார்த்திருந்தனர்.

வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 4.2 வீதமாக இருந்த நிலையில் அக்டோபரில் 4.1 வீதமாக குறைந்துள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி, கடந்த வாரம் தனது முக்கிய வட்டி விகிதத்தை 3.75 வீதம் தொடக்கம் 4.00 வீதம் என்ற அளவில் மாற்றமின்றி வைத்துள்ளது.


இந்த நிலையில்,வலுவான வேலைவாய்ப்புச் சந்தை காரணமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கிக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி எதிர்பார்ப்பை மிஞ்சியுள்ளதும் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதும் பொருளாதாரத்தின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.


அதேவேளை, பணவீக்கம் மற்றும் மத்திய கிழக்கு பதற்றங்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கான முக்கிய சவால்களாகத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us