Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் தொகை கற்பிட்டியில் கைப்பற்றப்பட்டது




 சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் தொகை கற்பிட்டியில் கைப்பற்றப்பட்டது


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


இலங்கை கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து, கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை (2026 நவம்பர் 28) முன்னெடுத்த விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 827 கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த ஒரு கெப் வாகனமும் (01), சந்தேகநபர் ஒருவரும் (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதற்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து, கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னெடுத்த இந்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வாகனமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, குறித்த கெப் வாகனத்தில் 22 மூட்டைகளில் பொதியிடப்பட்டு, போக்குவரத்திற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 827 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் தொகை, கெப் வாகனம் (01) மற்றும் சந்தேகநபர் (01) ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.







No comments

Subscribe Us