Column Left

Vettri

Breaking News

ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்றம்! பொலிஸாருக்கும் பிக்குகளுக்குமிடையில் மோதல்




 அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சற்றுமுன்னர் (7) அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விகாரை வளாகத்தில் தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது அங்கு பொலிஸாருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது அங்கு பொலிஸாருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை மோதல் எற்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

No comments

Subscribe Us