பெருந்தொகை கறுப்பு பணத்தை வங்கி கணக்குகளில் இரகசியமாக வைத்திருந்த பெண் அதிரடியாக கைது
பெருந்தொகை கறுப்பு பணத்தை கையாண்ட பெண் அதிரடியாக கைது 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் பணத்தை புழக்கத்தில் விட்டதாக சந்தேகத்தின் பேரில், முக்கிய குற்றவாளியின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் இழைக்கப்பட்டமை தொடர்பான விசாரணையை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் மற்றும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட 5 சந்தேகநபர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியிருந்தது.
இந்த சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரி, பிலியந்தல பகுதியில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில் பராமரித்து வந்த 4 கணக்குகள் குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த கணக்குகளுக்கு 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட நபர்களால் இந்த கணக்குகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டமை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த கணக்குகளைப் பராமரித்ததாக சந்தேகத்தின் பேரில் மேற்கூறிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடபத்தாவை சேர்ந்த 49 வயதான சந்தேகநபர், இன்று (6) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
இதற்கமைய, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

No comments