Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பில் வன்முறை கும்பலின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்: பெற்றோர்கள் உருக்கமான வேண்டுகோள்!




 மட்டக்களப்பு புதூர் பகுதியில் இயங்கி வரும் 7 பேர் கொண்ட வன்முறை குழுவினரின் கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி, இளைஞன் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறிய பொதுமக்கள் உதவுமாறு பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பெற்றோர்கள், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

கடந்த மாதம் 26 ஆம் திகதி, பாதிக்கப்பட்ட இளைஞர் சேத்துக்குடா பிரதேசத்தில் இருந்து புதூர் பகுதிக்குச் சென்றுள்ளார


இதன்போது அங்கு வழிப்பறியில் ஈடுபடும் வன்முறை கும்பல் ஒன்று, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

இதற்கு அந்த இளைஞர் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த வன்முறை கும்பல் இளைஞர் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது.


இத்தாக்குதலில் இளைஞரின் இதயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


No comments

Subscribe Us