Column Left

Vettri

Breaking News

தேசிய பிரதிபா நடன, சங்கீதப் போட்டியில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்திற்கு இரு முதலிடங்கள்




 தேசிய பிரதிபா நடன, சங்கீதப் போட்டியில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்திற்கு இரு முதலிடங்கள்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் – ஜே.கே.யதுர்ஷன்


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2026ஆம் ஆண்டுக்காக நடத்தப்பட்ட தேசிய பிரதிபா நடன, சங்கீதப் போட்டியில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையம் தேசிய ரீதியில் இரண்டு போட்டிகளில் முதலிடங்களைப் பெற்று திருக்கோவில் பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.


இதற்கமைய, கனிஷ்ட பிரிவில் நடைபெற்ற தனிநபர் நடனப் போட்டியில் பெண் பிரிவுக்கான புஷ்பாஞ்சலி நடனத்தில் முதலிடத்தையும், சிரேஷ்ட பிரிவில் நடைபெற்ற தனிநபர் கர்நாடக சங்கீதப் போட்டியில் ஆண் பிரிவில் முதலிடத்தையும் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தின் சார்பில் பங்குபற்றிய போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.


தேசிய மட்டத்தில் இரண்டு முதலிடங்களைப் பெற்றுள்ளமை திருக்கோவில் பிரதேசத்தின் கலைத்துறை வளர்ச்சிக்கும், இளம் கலைஞர்களின் திறமைக்கும் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.


இவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கலைஞர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தினருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



No comments

Subscribe Us