Column Left

Vettri

Breaking News

தீபாவளிக்கான சிறப்பு வில்லுப்பாட்டு




 தீபாவளிக்கான சிறப்பு வில்லுப்பாட்டு  

(  வி.ரி.சகாதேவராஜா)
தீபாவளி சிறப்பை கொண்டாடுமுகமாக,  கல்முனை நெற் ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இணைந்து வில்லுப்பாட்டு ஒன்றை வெளியிடவுள்ளது.

"போதையால் வந்த வாதை " எனும் தலைப்பிலான இவ் வில்லுப்பாட்டு நேற்று பெரிய நீலாவணை கலாச்சார மண்டபத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா, ஒருங்கிணைப்பு மைய செயலாளர் கா. சாந்தகுமார்   திட்ட இணைப்பாளர் பி.சந்திரமோகன், பொறுப்பாளர் என்.சௌவியதாசன் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தி ஒளிப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து பிரபல எழுத்தாளர்களான கலாபூஷணம் அக்கரைப் பாக்கியன், கலாபூஷணம் டேவிட் ஆகியோர் பங்கேற்றலில் வில்லுப்பாட்டு ஆற்றுகை மேடையேறியது.

 கல்முனை நெற் ஸ்தாபகர் பு.கேதீஸ் இதனை தீபாவளியையொட்டி வெளியீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

 இதேவேளை, ஜனவரி பிற் பகுதியில் இலக்கிய  ஆர்வலர்களுக்கு இரண்டாம் கட்டப்பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments

Subscribe Us