ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ள என்.பி.பி உறுப்பினர்கள்
ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வருகைத்தற்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பல உறுப்பினர் இன்று அதே ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ளதாக எதிர்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் அஜித். பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னான் அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய அவர் 323 கொள்கலன் விடுவிப்பு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கல்விக்கான ஒதுக்கீடு, மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 6வீதம் ஒதுக்க வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டம் மேற்கொண்டவர்கள், இன்று அரசாங்கத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் 3 வரவு செலவு திட்டங்களை முன்வைத்துள்ளபோதும் அவர்கள் தெரிவித்துவந்த 6வீத ஒதுக்கீட்டை கல்விக்கு ஒதுக்குவதற்கு முடியாமல் போயிருக்கிறது.
கடந்த வரவு செலவு திட்டத்தில் கல்விக்குமொத்த தேசிய உற்பத்தியில் 2.04 வீதமே ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது இது போதாது என தெரிவிக்கப்பட்டது.சுங்கத்தில் கொள்கலன்கள் நெருக்கடி நிலை ஏற்பட்டதால், கொள்கலன்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, துறைமுகத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவே தெரியவந்தது.
என்றாலும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட 223 கொள்கலன்கள் கட்டயாமாக பரிசோதிக்கப்பட வேண்டியவைகள் என சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.”என கூறியுள்ளார்.


No comments