Column Left

Vettri

Breaking News

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள்: வரவு - செலவு திட்ட விவாதத்தில் முக்கிய அறிவிப்பு




 தமிழீழ விடுதலைப்புலிகளில் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இது குறித்து கருத்து வெளியட்ட அவர், அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளக்கூடிய சலுகைகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட ஆனந்த விஜயபால

விடுதலை புலி உறுப்பினர்களாக இருந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் ஆரம்பகாலத்தில் புனர்வாழ்வாதார ஆணையாளர் காரியாலயத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தட்டு வந்தனர்.


புனர்வாழ்வளிக்கப்பட்ட 12190 பேர் தற்போது சமூகமயப்படுத்தப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ளன.

இவர்களின் ஆரம்பகட்டத்தின்போது, இவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு கடன் திட்டங்களை 2010 காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தோம்.

தற்போதுஇவர்கள்சமூகமயப்படுத்தப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்கள் தற்போது சாதாரண மக்களாக இருப்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படு் கடன் திட்டங்கள் ஊடாக அவர்களுக்கும் சுயதொழில் நடவடிக்கைகளுக்கு முறையாக பெற்றுக்கொள்ள முடியும். தற்கு எந்த தடைகளும் இல்லை” என்றார்.

No comments

Subscribe Us