Column Left

Vettri

Breaking News

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ பீட மாணவி!*




 *வீதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ பீட மாணவி!*


     



காலி - கராபிட்டிய மருத்துவ பீட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், 25 வயதுடைய பெலியத்த, வலஸ்முல்ல வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று அதிகாலை (3) பாலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து தண்டவாளத்தை ஆய்வு செய்ய வந்த திணைக்கள ஊழியர் ஒருவர் வீதியில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


கணவரின் வாக்குமூலத்தின் படி, மரணத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே சில வாக்குவாதம் இருந்ததாகவும், அவர் தவறான முடிவெடுக்கும் நிலையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இந்த மரணம் பெண்ணின் மீது தொடருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தா அல்லது தவறான முடிவெடுத்த மரணமா என்பதை கண்டறிய காலி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


மாணவியின் உடலுக்கான பிரேத பரிசோதனை இன்று (4) கராபிட்டிய மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


‎

No comments

Subscribe Us