வங்கக்கடலில் வலுவடையும் முரசு புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (01) ‘முரசு’ புயலாக வலுப்பெற உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த புயல், மேற்கு - வடமேல் திசையில் நகர்ந்து ஆந்திரக் கடற்கரையை நோக்கிச் செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நவம்பர் 3ஆம் திகதி ஆந்திராவின் நெல்லூர் – நரசாபூர் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 11.30 மணியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்கு மேலாக மேலும் தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இதன்போது மணிக்கு 90 முதல் அதிகபட்சமாக 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த வேளையில், கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments