கிளீன் ஸ்ரீலங்கா– அத்தம தேசிய தூய்மை தின வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் மூதூர் பிரதேசத்தில் முன்னெடுப்பு..!
கிளீன் ஸ்ரீலங்கா– அத்தம தேசிய தூய்மை தின வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் மூதூர் பிரதேசத்தில் முன்னெடுப்பு..!
(சேனையூர் நிருபர்)
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை தின வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டம், (2026.10.31) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைவாக, மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் பிரதான நிகழ்வு கட்டைபறிச்சான் 222 ஆம் படைப்பிரிவு இராணுவ முகாமிலிருந்து கட்டைபறிச்சான் பாலம் வரையிலான பகுதியில் நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுதல் மற்றும் மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் வீ.எம். றம்ஸி, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கடற்படை அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்டப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கினர்.


No comments