கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் C2 மையம் திறந்து வைப்பு
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் C2 மையம் திறந்து வைப்பு : தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச். ரியாஸாவுக்கு பாடசாலைச் சமூகம் கௌரவம்
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட C2 மையம் இன்று (30.10.2026) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் ஸ்மார்ட் தொழிநுட்ப மண்டபத்தில் பாடசாலை வழிகாட்டல், ஆலோசனை சிரேஷ்ட ஆசிரியை ஏ.எம். ஐனூன் நௌசாத் அவர்களின் நெறிப்படுத்தலில் அதிபர் எம்.எஸ்.எம். பைஷால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். ரியாஸா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய C2 மையத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட உளவியல் ஆலோசகரும் வாழ்க்கை வழிகாட்டியுமான என்.எம். நௌசாத், ஆசிரிய ஆலோசகர் ஜெஸ்மி மூஸா, கல்முனை அமீனாஸ் ஜுவலரியின் உரிமையாளர் ஏ.ஆர்.எம். கியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம். நிம்சாத் (மன்பயீ), பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா, அல்-மீஸான் பௌண்டேஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பாடசாலையின் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். ரியாஸாவுக்கு பாடசாலைச் சமூகம் சார்பில் கௌரவம் வழங்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆளுமை விருத்தி மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தின் திறப்பு, பாடசாலையின் கல்விசார் அபிவிருத்திப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நிகழ்வை ஆசிரியர் சட்டமானி எம்.வை.எம்.வை. இம்றான் தொகுத்து வழங்கினார்.

No comments