Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை ஜனாஸா நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு




 சம்மாந்துறை ஜனாஸா நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு


தில்சாத் பர்வீஸ்


சம்மாந்துறை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு, சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ரீ.எம். றமீஸ் ஹாபிஸ் தலைமையில் இன்று (31) சனிக்கிழமை சம்மாந்துறை Fruit Park Restaurant இல் நடைபெற்றது.


இதன்போது, சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ரீ.எம். றமீஸ் ஹாபிஸ் உரையாற்றுகையில், மரணித்தவர்களுக்கான ஜனாஸா பணிகளில் ஈடுபடுவது சிறந்த நற்கருமமாகும் எனத் தெரிவித்தார்.


மேலும், மனித வாழ்வின் பல்வேறு கட்டங்கள், இம்மை மற்றும் மறுமை வாழ்க்கையின் நோக்கம், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் மரணித்தவர்களை கண்ணியமான முறையில் குளிப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்வதன் மூலம் கிடைக்கும் நற்கூலிகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.


மரணித்தவர்களை நல்ல முறையில் அடக்கம் செய்வதன் மூலம் அல்லாஹ் வழங்கும் நற்கூலிகள், ஒருவருக்கு ஆடை வழங்குவதன் மூலமும் வாழ்வதற்குத் தேவையான வீட்டையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் கிடைக்கும் நன்மைகளுக்கு ஒப்பானவை என அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், மனிதர்கள் தமது வாழ்நாளில் குடும்பம், தொழில் மற்றும் சமூகப் பணிகளுக்கு உரிய நேரத்தை ஒதுக்கி, சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக வாழ்வதுடன், இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கான நற்செயல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் டாக்டர் எம்.ஏ. நபீல், நிந்தவூர் ஆயுள் வேத வைத்தியசாலை மருத்துவர்களான டாக்டர் எம்.எஸ்.எம். நஜிப், டாக்டர் ஏ.எல்.எம். றிபாஸ், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.எல்.எச். பசீர் மதனி, செயலாளர் எஸ்.எல்.எம். றிஸ்வான் (முப்தி), சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அப்துல் மஜீட் (சத்தார்), உப தலைவர் முகம்மது கலீல், பொருளாளர் நௌசாட் மற்றும் உறுப்பினர் அப்துல் மஜீது ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், சம்மாந்துறை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் ஆலோசகர் மௌலவி எம்.டி.எம். பஸீல், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.எம். பிரோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us