Column Left

Vettri

Breaking News

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!!




அனுமதி கிடைத்துள்ளதாகவும் கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன இங்கு தெரிவித்தார். மாணவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனுக்காக ஐந்து பிரிவுகளின் கீழ் (1–2, 3–5, 6–7, 8–10 மற்றும் 11–13 ஆம் ஆண்டுகள்) வழிகாட்டல் தொடரொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய முன்னோடித் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்திலும், முழுமையான நடைமுறைப்படுத்தல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். தொழிற்கல்வித் (TVET) துறையைத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்பப் புதுப்பித்தல், நவீனமயமாக்கல், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தொழிற்சாலைசார் பயிற்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான நான்கம்ச மூலோபாயத் திட்டமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்த்தல், ஆசிரியர் இடமாற்றங்களை முறைப்படுத்துதல், பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்தல், மாணவர்களின் உடல்நலத்துக்காக விளையாட்டு மற்றும் செய்முறைச் செயற்பாடுகளை மேம்படுத்துதல், மாணவர்களின் ஊட்டச்சத்தையும் சுகாதாரத்தையும் உயர்த்துதல் உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த பல விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Subscribe Us