Column Left

Vettri

Breaking News

கிராண்ட்பாஸில் துப்பாக்கி மற்றும் கொக்கைனுடன் சிக்கிய நபர்!!!




கிராண்ட்பாஸ், மஹவத்த பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்றும், 9 மி.மீ ரக 10 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மெகசினும், 50 கிராம் 300 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருளுடனும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us