ஐஸ் போதைப்பொருளுடன் முரவத்தே சீப்பு கைது!!!!
பாரியளலான போதைப்பொருள் கடத்தல்காரரான முரவத்தே சீப்பு என்ற ஒகஸ்டஸ் ரோஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவினால் இன்று (15) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 36 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், இலத்திரனியல் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சந்தேகநபர் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மொரட்டுவெல்ல பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு போதைப்பொருட்களைக் கொண்டுவந்து பொதியிட்டு, மொரட்டுவ மற்றும் கல்கிசை பகுதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக இந்த ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பில் தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையணியின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, குறித்த படையணியின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவின் வழிகாட்டலில் இந்தச் சோதனையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments