தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகள் திறப்பு!!!!
தெதுருஓய நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 5,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள அளவை மேலும் அதிகரிக்க நேரிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தெதுருஓயாவின் பள்ளத்தாக்குப் பகுதிகளின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது
No comments