Column Left

Vettri

Breaking News

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!




தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (18) மாலை 6 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகள்: நிலை 2 - எச்சரிக்கையுடன் இருங்கள் (அம்பர் நிற எச்சரிக்கை): நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன இரத்தினபுரி மாவட்டம்: எலபாத்த, குருவிட்டை, இரத்தினபுரி கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்லை, யட்டியாந்தோட்டை பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, பசறை மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை நிலை 1 - விழிப்புடன் இருங்கள் (மஞ்சள் நிற எச்சரிக்கை): கேகாலை மாவட்டம்: ருவான்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, வரக்காபொல குருநாகல் மாவட்டம்: ரிதிகம கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை, பன்வில, உடுநுவர, தெல்தோட்டை, யட்டிநுவர, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, உடுதும்பரை, அக்குறணை, பூஜாப்பிட்டிய, மெததும்பரை மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோறளை, உக்குவெல, மாத்தளை இரத்தினபுரி மாவட்டம்: அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, கலவான, இம்புல்பே, நிவித்திகல, கொலொன்ன, பெல்மதுளை நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ

No comments

Subscribe Us