நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் உலக முட்டை தினம் அனுஷ்டிப்பு!!!
உலக முட்டை தினம்
உலக முட்டை தினத்தை முன்னிட்டு, 09.10.2026 அன்று நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கும் விசேட நிகழ்வு நடைபெற்றது.
நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் டாக்டர் திருமதி மயூரன் யாமினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 25 கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 25 முட்டைகள் வீதம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் (Midwives) மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கும் புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய போஷாக்கு நன்மைகள் தொடர்பாக டாக்டர் திருமதி மயூரன் யாமினி அவர்களினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும் கர்ப்பிணிப் பெண்களின் போஷாக்கை மேம்படுத்துவதுடன், முட்டையின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்ததுடன், இதன் மூலம் உலக முட்டை தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டதுடன்கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான PSDG 2026 வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் பங்களிப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து
No comments