Column Left

Vettri

Breaking News

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!!!!




கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர். நேற்று பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குகள் குழுவினர், இரவில் மேடை ஒன்றை அமைக்க முற்பட்ட போது பொலிஸாருடன் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது. எனினும், ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை அவ்விடத்தை விட்டு அகலப்போவதில்லை என தித்தகல்லே ஆனந்தசிரி தேரர் அங்கு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று (16) நண்பகல் வரை தங்கியிருந்த பிக்குகள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகச் சென்றனர். அங்கு அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தெரிவித்து, பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்குச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் காவி உடைக்கு நீதி - சுதந்திர நடைபவணி கடந்த 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமாகி 16 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது.

No comments

Subscribe Us