Column Left

Vettri

Breaking News

காரைதீவின் புலமைப்பரிசில் முதல் சாதனை மாணவி மோகாத்மிகா கௌரவிப்பு!!!




( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வலயத்தில் காரைதீவுக் கோட்டத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய 168 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்ற செல்வி உதயகுமார் மோகாத்மிகா சர்வதேச முதியோர் தினவிழாவில் கௌரவிக்கப்பட்டார். சர்வதேச முதியோர் தினவிழா , காரைதீவு கண்ணகி முதியோர் சங்கத்தின் தலைவர் த. சிவானந்தராஜா தலைமையில் கண்ணகி சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (13) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பொழுதே அவர் கௌரவிக்கப்பட்டார். அவருடன், காரைதீவு 1 ஆம் பிரிவில் தெரிவான மற்றும் ஒரு மாணவி செல்வி ஜெயரூபன் பேனுக்ஷா (133) வும் கௌரவிக்கப்பட்டார். இவர்களுக்கான பரிசுகளை 1ஆம் பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் செல்லத்துரை கஜேந்திரன் வழங்கி வைத்தார்.

No comments

Subscribe Us