Column Left

Vettri

Breaking News

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.




 உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.


செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) உள்ளிட்டவற்றில் முதலீடுகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஆண்டு அறிக்கையின்படி, 2026ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி நிலவரப்படி, அந்நிறுவனத்தில் உலகளவில் 2,23,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர்.


விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டு வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிலையான பணிநீக்க இழப்பீடு, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள், தொழில் மாற்றத்திற்கான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us