Column Left

Vettri

Breaking News

சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் அக்கரைப்பற்று மாணவி சாதனை: இந்தோனேசியாவில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை! தேசிய மட்டத் தெரிவுப் பரீட்சையில் முதலிடம் பெற்று சர்வதேச அரங்கில் ஜொலித்த முகம்மது ஹஸ்பி அனாபா! அக்கரைப்பற்று முனவ்வரா ஜூனியர் கல்லூரித் தரம் 6 மாணவியின் மகத்தான வரலாற்றுச் சாதனை




! (பாறுக் ஷிஹான்) இந்தோனேசியாவில் நடைபெற்ற 23ஆவது சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் (IMSO 2026), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 06 மாணவி முகம்மது ஹஸ்பி அனாபா (MH. Anaafa) விஞ்ஞானப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கும், தனது பாடசாலைக்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா (West Java) பிரதேசத்தில் ஒக்டோபர் 02ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில், உலகளாவிய ரீதியில் பல நாடுகளைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். மாணவர்களின் அறிவியல் அணுகுமுறை, தர்க்கரீதியான சிந்தனை மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் என்பவற்றை வெளிப்படுத்தும் உயரிய சர்வதேசத் தளமாக இப்போட்டி விளங்குகின்றது. அக்கரைப்பற்று முனவ்வரா ஜூனியர் கல்லூரியில் (Munawwara Junior College) தரம் 06 இல் கல்வி பயிலும் முகம்மது ஹஸ்பி அனாபா, விஞ்ஞானத் துறையில் கொண்ட பேரார்வம் காரணமாக வலய, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடத்தப்பட்ட பல்வேறு கட்டக் கடினமான தெரிவுப் பரீட்சைகளில் திறமையை நிரூபித்தார். இறுதியாக, இலங்கையின் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞான அணியைத் தெரிவுசெய்யும் தேசிய மட்ட இறுதிப் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்று, இலங்கைப் பிரதிநிதியாகச் சர்வதேச போட்டிக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவாகியிருந்தார். அட்டாளைச்சேனை, தைக்காநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்மாணவியின் தந்தையாரான டாக்டர் ஐ.எம். ஹஸ்பி (Dr. IM. Hasby) அம்பாறை மாவட்டப் பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார். தாயார் எம்.ஜே. பாத்திமா சலீதா (MJ. Fathima Saleetha) ஆவார். கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு மாணவி, முறையான வழிகாட்டல் மற்றும் விடாமுயற்சி இருந்தால் சர்வதேச மட்டத்திலும் முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு அனாபாவின் சாதனை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இளம் வயதிலேயே சர்வதேச அரங்கில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி முகம்மது ஹஸ்பி அனாபாவின் கல்விப் பயணம் மேலும் தொடரவும், எதிர்காலத்தில் நாட்டின் முன்னணி விஞ்ஞானியாக மிளிரவும் பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். -- Thanks & Best Regards, பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) Journalist-මාධ්‍යවේදී FAROOK SIHAN(SSHASSAN) B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna ) 0779008012-(URGENT) sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com 0719219055,0712320725,0754548445

No comments

Subscribe Us