Column Left

Vettri

Breaking News

பிராந்தியத்தின் பாதுகாப்பே மிக முக்கியம் - ஜனாதிபதி!!!




இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய படியாக, கைச்சாத்திடப்பட்ட மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. இலங்கை விமானப் படைக்காக L70 துப்பாக்கிகளின் நவீனமயப்படுத்தல் ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மற்றும் இலங்கை மாணவர் படையணி மற்றும் இந்திய மாணவர் படையணி ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இங்கு பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. மேலும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 03 பெய்லி பாலங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைய வழி ஊடாக கலந்துகொண்டனர். டித்வா சூறாவளிக்குப் பின்னர் அத்தியாவசிய வீதிகளை மீளமைப்பதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட புனரமைப்பு உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்சியகம - குருநாகல், கெபெல்லேவ - குருநாகல் மற்றும் பழுகாமம் - மட்டக்களப்பு ஆகிய பாதைகளில் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலங்கள் இவ்வாறு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.

No comments

Subscribe Us