Column Left

Vettri

Breaking News

பாலையடியில் களைகட்டும் இரவுநேரத் திருவிழா!!!




( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் இரண்டாம் நாள் இரவு பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில், மகோற்சவ குரு சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ பிரபாகரக் குருக்கள் முன்னிலையில் உள்வீதி வெளிவீதி உலாவுடன் நடைபெற்று வருகிறது. ஆன்மீக உணர்வாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா சொற்பொழிவாற்றினார். பத்தாம் நாள், எதிர்வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு சித்திரத்தேரோட்டம் இடம்பெறும். எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவமும், கொடியிறக்கமும் இடம்பெறும். திருவிழா காலங்களில் தினமும் காலை 9 மணிக்கு அபிஷேக பூஜையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு இரவு திருவிழாக்கள் இடம்பெறும். 09 ஆம் திகதி மாம்பழத்திருவிழா, 11 ஆம் திகதி வேட்டைத் திருவிழா,12 ஆம் திகதி பாற்குடபவனி,13 ஆம் திகதி முத்துச்சப்பர ஊர்வலம் என்பன சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆலய தலைவர் இரா.தவராசா மேலும் தெரிவித்தார்.

No comments

Subscribe Us