புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு உபதவிசாளரின் மாதாந்த கொடுப்பனவு
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த ஆறு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று சமூக சேவையாளரும் ஆசிரியருமான கே. கண்ணதாசன் தலைமையில் பொது மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர்
கே.புவனரூபன் தான் பதவியேற்ற காலம் முதல் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுமக்கள் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தனது 7வது மாத கொடுப்பனவை புலமைப் பரிசில் சாதனை மாணவர்கள் அறுவருக்கும் வழங்கி வைத்தார்.
மாணவர்களான ர. அருணஜித் ,
கு.லக்ஸயா,
சு. நிசாரனா,
மோ. அபிஷயா,
பே. ருக்ஷயா ,
கு. அகர்வின் ஆகிய ஆறு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் கே.சர்வேஸ்வரன், , வகுப்பாசிரியர் ராஜீந்திரன் ,பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்
No comments