Column Left

Vettri

Breaking News

மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயாலயத்தில் இம்முறை வெளியாகிய புலமை பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்!!!




பாடசாலை வரலாற்றில் பதினாறு வருடங்குளுக்கு பின்னர் இவ்வாறு அதிகூடிய மாணவர்களான ஐந்து மாணவர்கள் சித்தியடைந்த உள்ளனர். இம் மாணவர்களையும் கற்பித்த ஆசிரியரகளையும் பாராட்டி கொளரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் இ.தவராஜ் அவர்கள் தலைமையில் ஓந்தாச்சிமடம் இந்து இளைஞர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் 07.09.2026 திங்கட் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனை கோட்டக் கல்வி பணிப்பாளரும் உதவிக்கல்வி பணிப்பாளருமான க.ரகுகரன் அவர்களும் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் இ.இளங்கீரன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் கவிவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ் ரீபன்ராஜ் -நிவேர்த்தி -149 புள்ளிகள் மகேந்திரன்- கர்ணிகாலோசனி -146 புள்ளிகள் சத்தியராஜ் டர்க்ஷனா -140 புள்ளிகள் தெய்வேந்திரராஜா- ஓஜிஹா -135 புள்ளிகள் தமிழ்வாணன் -சகிஸன் - 134 புள்ளிகள் ஆகிய மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியர் ஞ.ஞானதர்சன் அவர்களும் இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.....பழுகாமம் நிருபர்

No comments

Subscribe Us