காரைதீவில் பெண்கள் விவசாய சங்கங்கள் வலுவூட்டல் மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி மேம்பாட்டு வார நிகழ்வு ஆரம்பம்!!!
(வி.ரி. சகாதேவராஜா)
பெண்கள் விவசாய சங்கங்களை வலுவூட்டல் மற்றும் உள்ளூர் உணவு உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் "பெண்கள் விவசாய சங்க வலுவூட்டல் மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி மேம்பாட்டு வார நிகழ்வு" காரைதீவில் நேற்று வெகு சிறப்பாக ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியை திருமதி. சஜிகலா ரகுநந்தன் தலைமை தாங்கினார்.
இதில் அக்கரைப்பற்று பிரிவு உதவி விவசாய பணிப்பாளர் திருமதி. அழகுமலர் ரவீந்திரன் தலைமையக விவசாய போதனாசிரியர் எஸ். தஸ்லீம், காரைதீவு தொழிநுட்ப உதவியாளர் ஏ. டி. தஸ்னிம் மற்றும் சுவாட் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் பெண்கள் விவசாய சங்கங்களின் பங்களிப்பு, உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரித்தல், சந்தைப்படுத்தல் வாய்புகள் மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பெண்களின் விவசாய முயற்சிகளுக்கு அரசின் ஆதரவும் ஊக்குவிப்பும் அவசியம் என பங்கேற்ற அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.
No comments