ஹெலியில் மறைந்த கதிர்காமத்தம்பி ஒரு சரித்திர புருஷர்!!!
(வித்தகர் வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு)
அம்பாறை மாவட்டத்தின் பிரபல அரசியல் பிரமுகர் கதிர்காமத்தம்பி அவர்கள் மறைந்து இன்று 2026,செப்டம்பர்,16, ஆம் திகதி 26ஆவது ஆண்டு நினைவுதினம்..!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பிரபல அரசியல் வித்தகருமான அஷ்ரப் அவர்களுடன் இதே நாளில் உலங்கு வானூர்தி விபத்தில் மரணித்த ஒரேயொரு தமிழர் திரு.கதிர்காமத்தம்பி ஆவார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவுக்கிளையின் ஆற்றல்மிக்க செயலாளர் பீரங்கி பேச்சாளர் நைட்டா அரச உத்தியோகத்தர் க.செல்வப்பிரகாஷ் உள்ளிட்ட எழுவரின் தந்தை இவர்.
அவர் ஞாபகார்த்தமாக இன்று இக் கட்டுரை வெளிவருகிறது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப்பிரதேசம் வீரமுனை மண்ணில் 1951,அக்டோபர்,23, ல் சின்னத்தம்பி தம்பதிகளுக்கு அவதரித்தவர் கதிர்காமத்தம்பி அவர்கள்,
இவர் தமது 25, அகவையில் ஒரு துடிப்புள்ள இளைஞனாக 1977 காலப்பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் ஒரு பிரியமானவராக அந்தக்கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அதில் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பாட்டாளராகவும் பணிபுரிந்த ஒரு தமிழ்த்தேசிய கொள்கைப்பற்றாளர் ஆவார்.
1977, பொதுத்தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகமாகவும்,எதிர்கட்சி தலைவராகவும் இருந்த அமரர் அ.அமிர்தலிங்கத்துடன் மிக நெருக்கமான நம்பிக்கையாளராக மாறியதுடன் அந்த காலங்களில் ஏற்கனவே தமிழரசுகட்சி தூண்கள் என வர்ணிக்கப்பட்ட அமரர்களான
யோகேஸ்வரன்,ஆலாலசுந்தரம் ,சுந்தரலிங்கம், சிவசிதம்பரம், டாக்டர், நீலன் திருச்செல்வம் ஆகியோருடனும் நட்பு ரீதியாக பழகிய வரலாறுகளும் உண்டு. அம்பாறை மாவட்டத்தில் பல தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்களுடன் இவரும் இணைந்து செயல் பாடுகளை கொள்கைப்பற்றுடன் முன் எடுத்ததார்.
1994, ல் அம்பாறை மாவட்டத்தில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வேளையில் மறைந்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும் அம்பாறையில் வேட்பாளராக போட்டியிட்ட வேளையில் அவருக்கு ஆதரவாகவும் விருப்பு வாக்கை செலுத்தும் விதமாக மக்களிடம் பிரசாரம் மேற்கொண்ட ஒருவர்.
பாண்டிருப்பு தமிழர் விடுதலை கூட்டணி கல்முனை தொகுதி அமைப்பாளராக செயல்பட்ட வேல்முருகு அவர்களுடன் இணைந்தும் கட்சிப்பணிகளை உறுதியை செய்தார்.
1981,ல் மாவட்ட சபைத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியால் சம்மாந்துறை பிரதேசத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு 1989,ல் 1994,ல் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு விகிதாசார தேர்தல்களில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராகவும் போட்டியிட்ட வரலாறு இவருக்கு உண்டு.
ஆயுள்வேத வைத்தியராக கடமைபுரிந்தவர் இந்தியாவில் பிரபல ஆயுள்வேத கல்லூரியில் ஆயுள்வேத வைத்தியபட்டத்தினை பெற்றவர்
இன மத வேறுபாடின்றி மனிதநேயத்துடன் பல சமூகப்பணிகளையும், பலருக்கு சுயதொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்த மனித நேயத்தொண்டர்.
மரணித்த வரலாறு!
கடந்த 2000,செப்டம்பர்,16, ல் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து அன்று காலை 9.30 மணியளவில் புறப்பட்ட MI.17, உலங்கு வானூர்த்தியில் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் தலைவராகவும், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் செயலாற்றிய எம்.எச்.எம். அஷ்ரப் 16 பேரும் அம்பாறையை நோக்கி புறப்பட்டு அடுத்த 45 நிமிடங்களில் வானூர்த்தி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கேகாலை மாவட்டம், அரநாயக்க பகுதியில் உள்ள ஊராகந்த மலைப்பகுதியில் (பைபிள் ராக் அருகில்) விபத்துக்குள்ளானது உலங்கு வானூர்த்தி விபத்து நடந்த சில மணிநேரங்களிலேயே, ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதன் பாகங்கள் மற்றும் அதில் பயனித்த 16, உடல்கள் அப்பகுதி மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.
அந்த வானூர்த்தியில் பிரயாணம் மேற்கொண்ட அந்த 16 பெயர் விபரம்:
1. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் (09, பேர்)
1. அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்,
3. ஏ. எல். எம். கதீர் (அமைச்சரின். தனிப்பட்ட செயலாளர் / கட்சி முக்கியஸ்தர்)
5. எம். நவாஸ்.
7. எம். எஸ். எம். நியாஸ்.
9. ஏ. எம். எம். மஹ்ரூப்.
11. எம். ஆர். தௌபீக்.
13. ஏ. ஜே. எம். முஸம்மில்.
15. யு. எல். எம். பாறுக்.
17. எம். ஐ. எம். மன்சூர்.
19. ஏ. ஆர். முஹம்மது.
பாதுகாப்புப் பிரிவினர் மெய்க்காப்பாளர்கள் (3 பேர்)
11. பி. ஜி. நிர்மலசிறி.
13. டி. எஸ். குணரத்ன.
15. ஆர். ஏ. ஜயரத்ன.
இலங்கை விமானப்படை விமானிகள் (2 பேர்)
14.ஸ்குவாட்ரன் லீடர் ஷிரான் பெரேரா (முதன்மை விமானி)
15. விமானப்படை அதிகாரிகள் குழுவைச் சேர்ந்த மற்றுமொரு சிங்கள ஊழியர்
16. சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (அமைச்சர் அஷ்ரப்பின் நண்பர்)
இதில் 10, முஸ்லிம்கள்,05, சிங்களவர்கள்,01, தமிழர் என மொத்தமாக 16, பேர் சாவடைந்தனர்.
இந்த விபத்தில் ஒரு அம்பாறை மாவட்ட தமிழனும் உயிர் இழந்துள்ளார் என்ற வரலாறு பல தமிழர்களுக்கும் தெரியாது அவரையும் தமிழர்கள் நினைவு கூருவதற்காகவே இந்த பதிவு..!
அமரர் கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மனைவி ஜோண் ஞானம்மா ஆகியோர்கள் இல்லற வாழ்வில் இணைந்து ஆறு ஆண்களும், ஒரு பெண்ணுமாக மொத்தம் ஏழுபேர் இருந்தனர்.
மறைந்த ஆயுள்வேத வைத்தியர் கதிர்காமத்தம்பி அவர்கள் ஒரு சரித்திம் ..!
வரலாறுகள் மறைக்கப்படவோ. மறுக்கப்படவோ கூடாது .
No comments