லுணுவள தொழிற்பேட்டையில் கயிறு பதப்படுத்தும் தொழில்சாளையில் தீ விபத்து!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
லுணுவள தொழிற்பேட்டை பகுதியில் ஏற்றுமதிக்காக கயிறுகளை உற்பத்தி செய்து பதப்படுத்தும் பிரபல தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (30) அதாகாலை சுமார் 3 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது
தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரெனப் புகைமூட்டத்துடன் எழத் தொடங்கிய தீ, அங்கிருந்த கயிறு மூலப்பொருட்களின் காரணமாக சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது.
தீயின் வேகம் அதிகரித்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் படையினர் அவசரமாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, சிலாபம் தீயணைப்புப் பிரிவினர், லுணுவள பொலிஸார் மற்றும் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தீவிர போராட்டத்தின் பலனாகப் பரவிவந்த தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பதை வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசேல புல்வங்ஷ உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக லுணுவள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments