Column Left

Vettri

Breaking News

கிழக்குமாகாண பொலிஸ் தடகளப் போட்டியில் பொலிசார் சாதனை; சிறந்த வீரர்களாக இருவர் தெரிவு!!!




(செல்வி வினாயகமூர்த்தி) 2026ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தடகள விளையாட்டுப் போட்டி கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் N.L.C. சம்பத் குமார தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதன்போது, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா, கிழக்கு மாகாணத்தின் சிறந்த தடகள வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர். (சாரதி ) திரு தயானந்த, இளையோர் பிரிவில் ஆண்களுக்கான சிறந்த தடகள வீரராகத் தெரிவு செய்யப்பட்டார். இளையோர் பிரிவில் பங்கேற்ற திரு.தயானந்த, 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, மூத்தோர் பிரிவில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி விஜிதா, மரதன் ஓட்டம் மற்றும் 02 கிலோமீற்றர் வேக நடைப் போட்டியில் முதலிடத்தையும், 3000 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்ற பொலிஸ் வீரர், வீராங்கனைகளும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us