சம்மாந்துறை SSC விளையாட்டுக் கழகம் சாதனை வெற்றி: SEA STAR T20 சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது!
(மஜீட். ARM)
24 அணிகள் மோதிய பெருமைமிக்க 'SEA STAR T20 CHAMPIONSHIP – 2026' கடின பந்து லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் பட்டத்தை சம்மாந்துறை SSC கழகம் அணி சுவீகரித்துள்ளது.
தொடரின் இறுதிப்போட்டியில் 'FINE STAR ' அணியை எதிர்கொண்ட SSC விளையாட்டு கழகம் , அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய FINE STAR விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சம்மாந்துறை SSC அணி, வெறும் 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ஓட்டங்களை பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இத்தொடர் முழுவதும் சம்மாந்துறை SSC அணியின் அணித்தலைவர் இஸ்மத் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் அதிரடியாக 86 ஓட்டங்களைக் குவித்த அவர், பந்துவீச்சிலும் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
இதன் மூலம் தொடரின் நாயகன் சிறந்த துடுப்பாட்ட வீரர் அதிக ஓட்டங்களை பெற்று இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் ஆகிய அனைத்து முக்கிய விருதுகளையும் தன்வசப்படுத்தி அணியின் வெற்றிக்கு அச்சாணியாகத் திகழ்ந்தார்.
No comments