Column Left

Vettri

Breaking News

ஆரையம்பதியில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட SKO கராத்தே பயிற்சி நிலையம்!!




மட்டக்களப்பினை தலைமை காரியாலயமாக கொண்டு இயங்கி வரும்  SKO கராத்தே பயிற்சி நிலையம் பல கிளைகளை நிறுவி வருகின்றது         இதன் அடிப்படையில் ஆரையம்தியில் SKO பயிற்சி நிலையம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பொறுப்பு ஆசிரியராக திரு.த.வினோசாந்த் அவர்களால் புதிய கிளை நவீனத்துவதத்துடன் பயிற்சி உபகரணங்களையும் கொண்டு ஆரையம்பதியில் இன்று(04) ஆரம்பிக்கப்பட்டது 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கெளரி தினேஷ் அவர்கள் திறந்துவைத்ததுடன்   தலைமை பொறுப்பாசிரியராக K.T. பிரகாஸ் அவர்களும் சிறப்பு போதன ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் 

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பட்டி வழங்குதல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது இக் கழகமானது ஆரையம்பதியில் பல மாணவர்களை பயிற்று வித்துவருவதுடன் கடந்த கால போட்டிகளிலும் பங்கு பற்றி பாடசாலை மட்ட மாகாண போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளதோடு    30 வருடங்களாக இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments