Column Left

Vettri

Breaking News

கற்பிட்டி மண்டலகுடா பவர் சேர்ச் (Power Surge) விளையாட்டு மைதானத்திற்கு புதிய மின் குமிழ்கள் பொருத்தப்பட்டன!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி மண்டலக்குடா பவர் சேர்ச் விளையாட்டு மைதானத்தின் மின் குமிழ்கள் கடந்த பல மாதங்களாகப் பழுதடைந்து இருளில் மூழ்கியிருந்து. இது விடயமாக பவர் சேர்ச் விளையாட்டு கழகத் தலைவர் கிராம உத்தியோகத்தர் எம் பீ எம்.அர்ஷத் கற்பிட்டி பிரதேச சபையின் மண்டலக்குடா உறுப்பினரும் வெற்றி நாயகனுமாகிய சுவிஸ் பைசலிடம் முன்வைத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக மைதானத்தின் சகல மின் குமிழ்களும் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டும் புதிய மின் குமிழ்கள் பொருத்தப்பட்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்பணியினை விரைவாக மேற்கொண்டு தந்த கற்பிட்டி பிரதேச சபையின் மண்டலகுடா வட்டார உறுப்பினர் சுவிஸ் பைசல் இதற்கு முழுமையான ஆதரவு வழங்கிய பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் ரிகாஸ் மற்றும் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் ஆகியோருக்கும் கற்பிட்டி மண்டலக்குடா பவர் சேர்ச் (Power Surge) விளையாட்டு கழகத்தின் நிர்வாகக் குழு மற்றும் மண்டலகுடா வாழ் மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us