Column Left

Vettri

Breaking News

இரு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 50 பேர் கடற்படையினரால் கைது




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து 2026 ஓகஸ்ட் 01 முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 50 நபர்களும் 24 டிங்கி படகுகளும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி, திருகோணமலை, அரிசிமலை, புறா தீவு, நாயாறு, போல்டர் பொயிண்ட், அடுக்குப் பாடு, நிலாவெளி, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, மன்னார் சவுத் பார், தால்பாடு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பிரதேசங்களை உள்ளடக்கி, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்கள், உப்புவெளி, மருதங்கேணி பொலிஸ் நிலையம் மற்றும் புல்மோட்டை விசேட அதிரடிப்படை முகாம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன.

No comments

Subscribe Us