Column Left

Vettri

Breaking News

கடுமையாக தாக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த சிறுமி மீட்பு!!




கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயதுடைய சிறுமியொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13) வத்தேகம - யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் இருந்த போதே அச்சிறுமி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று சிறுமியைத் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டியொன்றில் வந்த சிலர் காலை 7 மணியளவில் அச்சிறுமியை அப்பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுமியைக் அழைத்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பில் CCTV காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Subscribe Us