Column Left

Vettri

Breaking News

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு!!




ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான குழுவினர், நிலைபேறான அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களை இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் 2027ஆம் ஆண்டிற்கான 3வது தன்னார்வ தேசிய மதிப்பாய்வு தயாரிப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்த மதிப்பாய்வு, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, குறைபாடுகளை அடையாளம் காண்பதுடன், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments

Subscribe Us