சம்மாந்துறை மஜீத்புரம் பகுதியில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம்!!!
(மஜீட். ARM)
சம்மாந்துறை - மஜீத்புரம் கிராமத்தில் நேற்று (08) இடம்பெற்ற சிரமதான நிகழ்வின் போது, சம்மாந்துறை மஜீத்புரம் வித்தியாலய ஆசிரியரான மீரா முகைதீன் தௌபீக் அவர்கள் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மல்வத்தை 3 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற இச்சிரமதானப் பணியில், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத (சுகவீனமான) நிலையிலும் கூட சமூகத்தின் மீதான பற்றுதலால் தௌபீக் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு சேவையாற்றியுள்ளார்.
அவ்வாறு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நோய் நிலையையும் பொருட்படுத்தாமல் சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த இந்த ஆசிரியரின் உன்னதமான மனிதநேயமும், அவரது திடீர் மறைவும் அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளதுடன் கல்விச் சமூகத்தை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
No comments