திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது ..!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது கொடித்தம்பத்திற்கு விசேட பூசை இடம்பெற்று துவஜாரோகணம் எனப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து எதிர்வரும் 09.09.2026 அன்று புதன்கிழமை இரதோற்சவமும், மறுநாள் வியாழக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
No comments