Column Left

Vettri

Breaking News

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!!




பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மேற்கூறிய கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments

Subscribe Us