திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்,சுற்றாடல் துறை பிரதியமைச்சர் பங்கேற்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம்..!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி .எம். ஹேமந்த குமார அவர்களின் ஒழுங்கமைப்பிலும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச் சந்திரா தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர,சுற்றாடல் துறை பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன்,ரொசான் அக்மீமன மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,அரச உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் திருகோணமலை மாவட்ட சுற்றாடல் சார் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சாம்பல் தீவு கரையோர பாதுகாப்பு,சுற்றாடலை பாதுகாக்கவும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்போதைய மாவட்ட அபிவிருத்தி எநிர்கால அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டன. கடந்த கால அபிவிருத்தி தொடர்பான மதிப்பீடுகளை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய விடயங்கள் குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டன.
No comments